मध्यारण्येश्वर सास्तृ ध्यान मञ्जरी
நடுக்காடுடையார் சாஸ்தா மகிமை சாஸ்தா தியான மஞ்சரி
பதிப்பாசிரியர் : T. S. சுப்பிரமணிய சாஸ்திரிகள் திருநெல்வேலி ஆண்டி வாத்யார்
நடுக்காவுடையார்:
ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா திருக்கோவில் தாமிரபரணி நதியில் இருந்து 4 கி மீ தூரத்தில் உள்ளது. நடுக்காட்டில் கோவில் கொண்டிருப்பவர் நடுக்காவுடையார் அல்லது வடமொழியில் மத்யாரண்யேஸ்வரர் என்று பெயர். தற்பொழுது இந்த இடம் காடாக இல்லாவிட்டாலும், புராண காலத்தில் சம்பக மரங்கள் அடர்ந்த காடாக "சம்பகாரண்யமி" என்று பெயர் பெற்று விளங்கியது.
ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தாவைப் பற்றிய வரலாறு ஸ்காந்த மஹா புராணம், ஸநத்குமார சம்ஹிதை, ப்ருஹ்ம விருத்தபுர மஹாத்ம்யம், க்ஷேத்ர வைபவ காண்டம், சம்பகாரண்ய மஹாத்ம்யம் என்ற 14ம் அத்யாயத்தில் ராம தீர்த்த வைபவம், பத்ரகாளி துர்கா தீர்த்தம், கந்தர்வ சாப நீக்கம் ஆகிய வரலாறுகளுக்கு பின் "மத்யாரண்யேஸ்வர சாஸ்த்ருவைபவம்" என்ற தலைப்பில் உள்ளது.
மத்யாரண்ய (ஸ்ரீ நடுக்காவுடையார்) சாஸ்த்ருவைபவம்:
நான்கு கொம்புகளையுடைய சங்குகர்ணன் என்ற அசுரன், புஷ்கரம் என்ற இடத்தில் கோரமான தவம் செய்து ப்ரஹ்மாவிடமிருந்து அனேக வரங்களைப் பெற்றான். பல இராக்ஷசர்களுடன் சேர்ந்து, பலவிதமான அட்டூழியங்களை செய்து கொண்டு சம்பகாரண்யம் என்ற காட்டை அடைந்தான். அந்த அசுரன், காட்டில் உள்ள சாது ஜனங்கள், முனிவர்கள் செய்து வரும் தவத்தை கெடுத்து, அவர்களை துன்புறுத்தி வந்தான். சம்பகாரண்ய காட்டில், "உக்ரதபஸ்" என்ற ரிஷி தவம் செய்து வந்தார். அவரது தவ வலிமையினாலும், சாஸ்தாவின் மூல மந்திரத்தை மிகக் கட்டுப்பாட்டுடன் ஜெபித்ததின் பலனாலும், ஸ்ரீ தர்ம சாஸ்தா, சர்வாயுதபாணியாக, பூத சைன்யங்களுடன் முனிவருக்கு காட்சியளித்து, இக்காட்டில் உள்ள இராக்ஷசர்களின் கூட்டங்களை தனது பரிவாரங்கள் மூலம் அழித்து விட்டார்.
மேலும் அவர் இங்கேயே, உங்களுடன் வாசம் செய்கிறேன் என திருவாய்மலர்ந்தருளினார். அது முதல், ஸ்ரீ தர்ம சாஸ்தா, "மத்யாரண்யேஸ்வரர்" அல்லது "நடுக்காவுடையார்" என்ற திருப்பெயருடன் கோவில் கொண்டு எழுந்தருளியிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அனவரதமும் அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ தர்ம சாஸ்தா சம்பகப் பூவை விரும்புவதால் சம்பகாரண்யத்தில் நிரந்தரமாக தங்கி விட்டார்.
ஸ்ரீ தர்மசாஸ்தா:
சாஸ்தா என்ற பதத்திற்கு, கட்டளையிடுபவன், குற்றம்புரிந்தோரை தண்டிப்பவன், சகல சாஸ்திரங்களின் உட்பொருளாக உள்ளவன், குரு, காவல் தெய்வம் என்றெல்லாம் பொருள். தர்மத்தை நிலைநிறுத்தும், நிர்வகிக்கும், தெய்வமாகிய ஸ்ரீ சாஸ்தாவிற்கு "ஸ்ரீ தர்ம சாஸ்தா" என்று பொருள்.
ஸ்ரீ பூர்ணாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் சமேதர்:
ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா, தமது இரு தேவியரான ஸ்ரீ பூர்ணாம்பாள், ஸ்ரீ புஷ்கலாம்பாள் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் வலது பக்கம் ஸ்ரீ பூர்ணாம்பாளும், இடது பக்கம் ஸ்ரீ புஷ்கலாம்பாளும் காட்சியளிக்கின்றனர். ஆரியங்காவிலும் இன்னும் பல ஸ்தலங்களிலும் ஸ்ரீ தர்ம சாஸ்தா, பூர்ணா புஷ்கலாம்பா சமேதராக தரிசனம் தருகிறார்.
மாதா பிதாக்களான, சிவ விஷ்ணுவின் அம்சங்கள் பூர்ணமாகவும் புஷ்கலமாகவும் ஒரு பொழுதும் அகலாமல் தன்னிடத்தே உடையவன் என்பது தத்துவ ரீதியான பொருள்.
பூர்ணா தேவி:
பூர்ணம் என்றால் நிறைவு. பொன்னிறம் வாய்ந்தவள். நீலத்தாமரையை இடது கையில் பிடித்தவள். வலது கை தொங்கிய நிலையானவள். கிரீடம் சூடியவள். சாஸ்தாவின் வலது பக்கத்தில், இடது காலை மடித்தவளாய், வலது காலை தொங்கவிட்டவளாய் அமர்ந்திருப்பவள். இதுவே பூர்ணா தேவியின் தோற்றமாகும்.
புஷ்கலா தேவி:
புஷ்கலம் என்றால் முழுமை. நீலநிறம் வாய்ந்தவள். வரமருளும் முத்ரையை இடது கையில் கொண்டவள். வலது கையில் ஒரு மலரும் கொண்டவள். கிரீடம் அணிந்தவள். சாஸ்தாவின் இடது பக்கத்தில், வலது காலை மடித்தவளாய், இடது காலை தொங்கவிட்டவளாய் அமர்ந்திருப்பவள். இதுவே புஷ்கலா தேவியின் தோற்றமாகும்.
ஸ்ரீ நடுக்காவுடையார் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அழகு:
1. பகவானின் பாதத்தாமரையை அழகு செய்வது வீர வண்டயம் அல்லது வீரக்கழல். இது வேத ஸ்வரூபமானது. அதன் ஒலி வேத கோஷமாகும்.
2. இடையில் சுற்றி கட்டி அணிந்திருப்பது பட்டு.
3. அரையில் முடிந்திருப்பது பொன்னரைஞாண்.
4. இடுப்பையும் முழங்காலையும் சேர்ந்து கட்டி இருப்பது யோக பட்டம்.
5. மார்பில் பல்வகை அணிகள்.
6. கழுத்தை அலங்கரிப்பது பூமாலை.
7. தோள்களில் தோள் வளைகள்.
8. புஜங்களில் வாகு வலயங்கள்.
9. மணிக்கட்டுகளில் வீர கங்கணங்கள்.
10. விரல்களில் மோதிரங்கள்.
11. கையில் விளையாட்டாக பிடித்திருப்பது தண்டுடன் கூடிய தங்கத்தாமரை.
12. காதுகளில் அசையும் குண்டலங்கள்.
13. நெற்றியை அலங்கரிப்பது முப்பட்டை திருநீறும் செந்தூரத்திலகமும்.
14. பரந்த கேசம்.
15. திருமுடியில் கிரீடம்.
16. சர்வ லக்ஷணங்களும் பொருந்திய ஸ்வரூபன்.
17. அழகன்.
ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள கல்யாண விரதம்:
கல்யாண விரதத்தின் பயனைத் தருபவன் ஸ்ரீ தர்ம சாஸ்தா. சர்வ மங்களங்களை அளிப்பதுவும், வாலிபர்களுக்கு நல்ல மனைவியையும், கன்னியர்களுக்கு நல்ல கணவனையும் கிடைக்கும் படி செய்வதுமான விரதத்தைக் கடைப்பிடித்து, ஸ்ரீ பூர்ணா தேவியும், ஸ்ரீ புஷ்கலா தேவியும், ஸ்ரீ தர்ம சாஸ்தாவை கணவராக அடைந்தனர். இந்த விரதத்தை பற்றி ஸ்கந்த மஹா புராணத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
யானை வாஹனன் ! குதிரை வாஹனன் !
ஸ்ரீ நடுக்காவுடையாரின் பரிவார தேவதைகள்:
Sri Poorna Devi Pravaram
[Lineage of Poorna Devi]
Chathur veda shakadhyayinim,
Sakala sasthrartha swaroopineem,
Chathurdasa bhuvanadheeswareem,
Akhilanda kodi Brahmanda nayakim,
Thathwa swaroopineem, Sarnagatha vathsalaam,
Padmalankrutha kara kamalaam,
Samsaroddhara gothrothbhavaam,
Chandra vamsa pradeepikaam,
Sarva mangala Dhayineem,
Pinchaka varmana puthreem,
Sri Poornaa namneem Sakshath Lakshmi swaroopineem,
Imam kanyaam, Sankalpa thanayaam.
Belonging to the four Vedas,
Having the form the meaning of all the Sastras,
The goddess of all the fourteen worlds,
The Lord the entire Universe of billion parts,
With the form of all philosophy, One who loves those who surrender to her,
One who has decorated herself with lotus and has a hand like lotus,
One born in the clan that lifted up the entire world,
The light of the clan of the moon God,
One who gives all auspiciousness,
The daughter of Pinchaka Verma,
One whose name is Poorna and has the real form of Goddess Lakshmi,
Is the maid who is my daughter of this declaration.
Sri Pushkala Devi Pravaram
[Lineage of Pushkala Devi]

Samsorathara gothrodhbhavaam,
Chidagni kunda sambhoothaam,
Chandra vamsa pradheepikaam,
Bhaktha soubhagya dhayinim Jagan matharam,
Palinjavarmana puthrim,
Sri Pushkalaa namneem, sakshad Durga swaroopinim,
Imam kanyaam Sankalpa thanayam.
Belonging to the four Vedas,
Having the form the meaning of all the Sasthras,

Belonging to the clan that lifts the earth,
Who was born out of the raging fire of Yaga,
Who is the one shining in the clan of moon god,
Who is the mother of universe who grants luck to her devotees,
Who is the daughter of Pinja Verma,
Whose name is Pushkala and who has the real form of Durga,

Sri Hari Hara Puthra Pravaram
[Lineage of Hari Hara Puthra Dharma Sastha]
Chathurveda Sakhadhyayine,
Sarnagatha uddharaya gothraya,
Sakala sasthrartha swaroopaya,
Chathurdasa bhuvanaadheesaya,
Akhilanda kodi Brahmanda Nayakaya,
Thwaadheesaya, parathparaaya,
Soma vamsa pradheepaaya,
Aadhi madhyantha rahitha sachidananda,
Para brahma swaroopa shiva puthraya, ayonijaaya,
Uthra Phalguni nakshatre, kanya rasou jaathaya,
Sri Hariharathmaja varaaya.
Belonging to all the four Vedas,
Belonging to the clan that uplifts those who surrender to them,
Who has the form of the meaning of all Shastras,
Who is the God of all the fourteen worlds,
Who is the lord of billions of globes belonging to the universe,
Who is the lord of philosophy, Who is most divine,
Who is the light of the clan of Soma,
Who does not have beginning, middle or end, Who is divinely joyous,
Who is the son of Shiva who has the form of divine Brahman, Who is not born from the womb,
And who is born on Uthara Phalguni (Uthram) Star of Kanya Rasi,
Is the bride groom who is the son of Hari and Hara.